குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
விளக்கம்
அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற் குறளால் உணர்த்தப் பெற்றது.
Translation
A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.
Meaning
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.
0 comments:
Post a Comment